முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களில் ஒருவகை காய்ச்சல் காரணமாக 9 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விடயத்தினை வடமாகாண சுகாதார அமைச்சர் ஞானசீலன் குணசீலனை உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர்கள் ஒருவகை வைரஸ் தாக்கத்தினாலேயே உயிரிழந்துள்ளதாகவும், அவற்றுள் பெருபாலானோர் இன்ஃபுலுவன்சா வைரஸ் தாக்கதினாலேயே உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே குறித்த வைரஸ் தொடர்பில் கொழும்பில் உள்ள மருத்துவமனைகளுக்கு அறிவிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.