யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவரின் உடலத்தை யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று உயிரிழந்த குறித்த நபரின் உடலத்தை இதுவரை யாரும் பொறுப்பேற்க வரவில்லையெனத் தெரிவித்து வைத்தியசாலை அதிகாரிகளால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைபாடு செய்யப்பட்டுள்ளது. கணபதி செல்வராசா என்ற 56 வயதான குறித்த நபர் கடந்த 9 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இவரை வைத்தியசாலையில் அனுமதித்தவர்கள் இவரது பெயரைத் தவிர உண்மையான விடயங்கள் எதையும் வழங்கவில்லை என வைத்தியசாலை அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த காலப்பகுதியில் அவரது உறவினர்கள் எவரும் வந்து பார்க்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இவரது உறவினர்களை தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.