Header image alt text

இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏதிலிகள் தொடர்பான அவுஸ்திரேலியாவின் கொள்கையை உலக சோஷலிசத்துக்கான அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது.

இந்தக் கொள்கையை ஏற்கனவே பல்வேறு நாடுகளும், மனித உரிமைகள் சார்ந்த அமைப்புகளும் விமர்சித்து வருகின்றன. அண்மையில் இந்தக் கொள்கையை ஒரு வருடத்துக்குள் மாற்ற அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் ஏதிலிகள் பேரவையினது விசேட குழுவொன்று வலியுறுத்தியிருந்தது. அதேநேரம், மானஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏதிலிகளை அவுஸ்திரேலியா பலவந்தமாக வெளியேற்றியமை தொடர்பிலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. Read more

வவுனியா, கணேசபுரம் 40 வீட்டுத்திட்டப் பகுதியில் வீடு ஒன்று தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இன்று காலை 10 மணிக்கு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கணேசபுரம், 40 வீட்டுத்திட்டப் பகுதியில் வசிக்கும் இராமமூர்த்தி ஜெகநாதன் குடும்பத்தினர் வவுனியா நகருக்கு சென்று வீடு திரும்பிய நிலையிலேயே அவர்கள் வசித்த தற்காலிக வீடு எரிந்த நிலையில் காணப்பட்டுள்ளது. Read more

மலேசியாவில் இருந்து குழு ஒன்றினை அனுப்பி, வடமாகாண மக்களின் தேவைகளின் தரவுகளைப் பெற்று உதவிகளை செய்வதாக மலேசியப் பிரதமர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மலேஷிய பிரதமருக்கும் வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் இன்று ஷங்கரில்லா ஹோட்டேலில் இன்று காலை 8.30 மணியளவில் நடைபெற்றது. சுமார் 45 நிமிட நேரம் இருவரின் சந்திப்பும் இடம்பெற்றது. பிரதமருடன் வந்திருந்த அமைச்சர்கள் வைத்திய கலாநிதி சுப்ரமணியம், டாடோ சாமிவேலு, தனிப்பட்ட அவரின் வைத்தியர் வைத்தியகலாநிதி ஜெயந்திரன் சின்னத்துரை உட்பட அவரின் அலுவலர் குழாமும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
Read more

வவுனியா தாண்டிக்குளம் கிராம சேவகர் பிரிவில் திருநாவற்குளத்தில் சமூக அமைப்புகளின் வேண்டுகோளுக்கு அமைவாக மக்களுக்கான பொது நூலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் தலைமையில் திருநாவற்குளம் கிராம அபிவிருத்தி சங்க வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

“கிராமங்கள் நோக்கிய கல்வி வளர்ச்சி” எனும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயற்றிட்டத்தின் ஊடான கழகத்தின் உறுப்பினர்களின் நிதி அன்பளிப்பில் இவ் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக ஜனநாயக மக்கள் விடுதல முன்னணி(புளொட்) இன் உப தலைவர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் பங்கேற்புடன், பொது நூலகத்திற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது. Read more

வவுனியா தோணிக்கல் கிராமத்தில் இளங்கோ இளைஞர் கழக இளைஞர்களால் நிர்மாணிக்கப்பட்ட பொது மலசல கூடம், குடிநீர் தொகுதி என்பன அமைக்கப்பட்டு அதன் கட்டிட திறப்பு விழா கழகத்தின் தலைவர் திரு நிதர்ஷன் தலைமையில் நடைபெற்றது.

மக்கள் பங்களிப்புடன், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து இளைஞர் பாராளுமன்றத்திற்கு ஒதுக்குகின்ற நிதியின் கீழ் Youth with Talent மக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டம் நாடாளாவிய ரீதியில் இளைஞர் கழகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. Read more

600 மெகா வோட் திறனுடைய இரண்டு அனல் மின் நிலையங்களை நிர்மாணித்தல் உள்ளிட்ட மின்சார உற்பத்தி கொள்கைகள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மற்றும் நுரைச்சோலை ஆகிய பகுதிகளில் இரண்டு அனல் மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்படடிருந்தது. கலாநிதி சரத் அமுனுகம மற்றும் அமைச்சர் ரன்ஜித் சியாம்பலாப்பிட்டிய ஆகியோரால் கையொப்பம் இடப்பட்ட இணைந்த அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலானது ஜெனிவா சம்பந்தப்பட்டதோ காணாமல் போனோர் சம்பந்தப்பட்டதோ அரசியல் கைதிகள் சம்பந்தப்பட்டதோ அல்லது அரசியல் தீர்வு சம்பந்தப்பட்டதோ அல்ல என முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவருமான வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பாலமீன்மடுவில் உள்ள அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் செயலாளர் சிறிதரன், மட்டக்களப்பு மாநகரசபை வேட்பாளர் குகன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், உள்ளூராட்சி சபை என்பது நுளம்புகளை ஒழிப்பதற்கான சபையாகும். Read more

வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதிஅரேபியாவுக்குச் சென்ற தனது சகோதரியை, வீட்டு எஜமானி, நாட்டுக்கு அனுப்பாமலும் சம்பளம் வழங்காமலும், தொடர்பு கொள்ள முடியாமலும், மறைத்து வைத்திருப்பதால், அவரை மீட்டுத் தருமாறு, அப்பணிப்பெண்ணின் சகோதரி கந்தையா நிரோஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயமாக இன்று ஊடகங்கள் வாயிலாக உருக்கமான வேண்டுகோளை விடுத்த அவர் மேலும் கூறியதாவது, “மட்டக்களப்பு, புன்னைச்சோலை, காளிகோயில் வீதியைச் சேர்ந்த கந்தையா ரஞ்சிதமேரி (வயது 30) என்ற யுவதி, கடந்த 2013ஆம் ஆண்டு ஜுலை மாதம் 19ஆம் திகதி, கொழும்பிலுள்ள ஒரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஊடாக வீட்டுப் பணிப்பெண்ணாகத் தொழில்வாய்ப்புப் பெற்று, சவூதி அரேபியா தமாமிலுள்ள முபாறக் பாலிஹ் முல்ஹி அல் அஜமி (Pழ. டீழஒ 1478, தொலைபேசி 0551979777) என்ற விவரமுடைய எஜமானனின் வீட்டுக்குச் சென்றுள்ளார். Read more

சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட ஒரு தொகை அலைபேசிகள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை டுபாய் மற்றும் சீனாவில் இருந்து வந்த 3 இலங்கையர்களிடம் இருந்தே இவை கைப்பற்றப்பட்டதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து 2000 அதிகமான அலைபேசிகள் மீட்கப்பட்டதாகவும், இதன் பெறுமதி 60 இலட்சம் ரூபாய் எனவும் சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியாவில் சர்வதேச மனித உரிமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று இலங்கை மனித உரிமை குழுவின் வவுனியா, மன்னார் பிராந்திய பொறுப்பதிகாரி வசந்தகுமார் தலைமையில் இன்று இடம்பெற்றது.

வவுனியா வெளிவட்ட வீதியில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் இந்த நிகழ்வுஇடம்பெற்றது. பல்வேறு மட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டிருந்த இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக பிரதம விருந்தினர்களிற்கு மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டனர். Read more