கிளிநொச்சி ஏ.9 வீதியின் ஆனையிறவு தட்டுவன்கொட்டி பகுதியில் நேற்றிரவு 7மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சியிலிருந்து தட்டுவன்கொட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள்கள் ஒன்றும் விபத்துக்குள்ளாகின. ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி தட்டுவன்கொட்டியைச் சேர்ந்த 29 வயதுடைய சிங்கராசா செந்தில்நாதன் என்பவரும் மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த கரவெட்டியைச் சேர்ந்த 36வயதான நல்லத்தம்பி துஷாந்தன் என்பவருமே உயிரிழந்துள்ளார்கள்.
இவ்விரு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்த இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.