உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக தேர்தல்கள் செயலகத்தில் தனியான அலுவலகமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் இதனை தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மாவட்ட செயலக மட்டத்திலும் இவ்வாறான அலுவலகங்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வேட்புமனுக்களை ஏற்கும் பணிகள் இரண்டு கட்டமாக இடம்பெற்றாலும் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஒரே தினத்திலேயே இடம்பெறும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன், தேர்தலை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.