வவுனியாவில் சர்வதேச மனித உரிமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று இலங்கை மனித உரிமை குழுவின் வவுனியா, மன்னார் பிராந்திய பொறுப்பதிகாரி வசந்தகுமார் தலைமையில் இன்று இடம்பெற்றது.

வவுனியா வெளிவட்ட வீதியில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் இந்த நிகழ்வுஇடம்பெற்றது. பல்வேறு மட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டிருந்த இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக பிரதம விருந்தினர்களிற்கு மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டனர். அத்துடன் வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவினராலும், ஏனைய மனித உரிமை செற்பாட்டளாளர்களாலும் மனித உரிமைகள் என்றால் என்ன அது எதற்காக சர்வதேச ரீதியாக கொண்டுவரப்பட்டது, ஏன் மனித உரிமைகள் தொடர்பான அணைக்குழு உருவாக்கப்பட்டது மற்றும், இலங்கையில் மனித உரிமை தொடர்பான செயற்பாடுகள் போன்ற பல விடயங்களை தொடர்பாக விளங்கமளிக்கப்பட்டது.

சர்வதேச மனித உரிமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்விலே வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருவாகரன், வடமாகாண சமூக சேவை பணிப்பாளர் திருமதி வனஜா, மற்றும் அரச உத்தியோகத்தர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.