இலங்கையில் காட்டு யானை தொகை மற்றும் வனஜீவராசிகள் வளங்கள் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக வனஜீவராசிகள் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஆகியோர் இணைந்து

ஒன்றிணைந்த வேலைத்திட்டமொன்றை மேற்கொள்வதற்கும், அதற்காக வன பாதுகாப்பு திணைக்களம் மற்றும் இலங்கை மகாவலி அதிகார சபையின் களப்பணியாளர்களின் ஒத்துழைப்பினையும் பெற்றுக் கொள்வது தொடர்பில் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும், காட்டு யானைகளை கொலை செய்வது தொடர்பில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்படுகின்ற ஆயுள் தண்டனையினை விதிப்பதற்கு ஏதுவான வகையில் வன ஜீவராசிகள் கட்டளைச்சட்டத்தினை திருத்தம் செய்வதற்கான யோசனைகளையும் அமைச்சரவை அனுமதித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.