உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 20 முறைப்பாடுகள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிறுவப்பட்ட தேர்தல் முறைப்பாடுகள் மத்திய நிலையத்திற்கு இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளன.

நேற்று தேர்தலுடன் தொடர்புடைய இரண்டு முறைப்பாடுகள் பதிவாகியதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த முறைப்பாடுகள் கண்டி மற்றும் குருணாகல் மாவட்டங்களில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த முறைப்பாடுகளில் பெரும்பாலானவை பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்களை பகிர்ந்தளித்தமை மற்றும் கட்டவுட், போஸ்டர்களை காட்சிப்படுத்தியமையுடன் தொடர்புடையவையாகும். இதனிடையே தேர்தலுடன் தொடர்புடைய 32 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் பெப்ரலின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார். அத்துடன் தேர்தலுடன் தொடர்புடைய 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கெபே அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.