1951ம் ஆண்டு 24ம் இலக்க துப்பாக்கி சூட்டு மைதானம் மற்றும் இராணுவ பயிற்சி சட்டத்தினை திருத்தம் செய்வது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் முப்படையினர் மற்றும் இலங்கை காவல்துறையினர் ஆகியோருக்கு மாத்திரமே துப்பாக்கிச்சூடு பயிற்றுவிக்கும் மைதானத்தில் பயிற்சி வழங்கப்படுகின்றது. எனினும் தற்போதைய நிலையில் நாட்டில் பாதுகாப்பு வழங்கும் ஏனைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் துப்பாக்கி சூட்டு பயிற்சி வழங்கப்பட வேண்டியுள்ளது. அதனடிப்படையில், ஏனைய தரப்பினருக்கும் துப்பாக்கி சூட்டு பயிற்சிகளை வழங்குவதற்கு ஏதுவான வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.