தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழாவும் கௌரவிப்பும் 17.12.2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3மணியளவில் கிளிநொச்சி விவேகானந்தநகர் கிழக்கு, கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் விவேகானந்தநகர் கிழக்கு, கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு. கறுப்பையா ஜெயக்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், விசேட விருந்தினராக வட மாகாண மீன்பிடி, கமநல, விவசாய அமைச்சர் கௌரவ கந்தையா சிவநேசன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், சிறப்பு விருந்தினர்களாக கிராம அலுவலர் திரு. பசுபதி சபாரட்ணம், கிராம அலுவலர் திரு. கந்தையா தர்மலிங்கம், ஆசிரிய ஆலோசகர் திரு. க.தவராசா, திரு. ஐயாத்துரை சண்முகராஜா(சண் மாஸ்டர்), திரு. ஐயம்பிள்ளை யசோதரன், திரு நாகலிங்கம் ரட்ணலிங்கம், ஆசிரிய ஆலோசகர் திரு. பொன்னம்பலம் விஜயநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தோடு,

கௌரவ விருந்தினர்களாக கிளி.விவேகானந்தா வித்தியாலய அதிபர் திருமதி மாணிக்கவாசகர் ஜெயலட்சுமி, கிளி.கனகாம்பிகைக்குளம் அ.த.க.பாடசாலை அதிபர் திரு. நல்லதம்பி சிவநேசன், கிளி.மத்திய ஆரம்ப வித்தியாலய அதிபர் திருமதி காஞ்சனா சிவகரன், கிளி.அன்னை சாரதா வித்தியாலய அதிபர் திருமதி மதியழகன் கோமதி, கிளி.பாரதி வித்தியாலய பிரதி அதிபர் திரு. யஸ்ரின் விக்னராஜ், கிளி.கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபர் திருமதி ஜெயந்தி தனபாலசிங்கம்,

விவேகானந்தநகர் மகளிர் சங்கத் தலைவி திருமதி சத்தியமூர்த்தி லலிதகுமாரி ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றதைத் தொடர்ந்து தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழாவும் கௌரவிப்பும் இடம்பெற்றது. தொடர்ந்து ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது. நிகழ்வுகளுக்கான நிதி அனுசரணையை லண்டனில் வசிக்கும் திரு. தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.