உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் இதுவரை 9 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 9ஆம் திகதி தொடக்கம் இன்று காலை 6 மணிவரை குறித்த 9 முறைபாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். இதற்கமைவாக, நேற்று பானம பிரதேசத்தில் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் 600 தென்னங்கன்றுகள் விநியோகிக்கபட்டதாகவும், குறித்த தென்னங்கன்றுகளை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொத்துவில் நீதிமன்றம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்கு அமைவாக கிடைக்கப்பெற்ற முறைபாடுகளுக்கு அமைய தாக்குதல் சம்பவங்கள், மிரட்டல், வேட்பாளர் பெயர் பட்டியலை திருடுதல், பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை சேதப்படுத்தல், பொருட்கள் மற்றும் உபகரணங்களை வழங்கிமை தொடர்பிலேயே முறைபாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.