மனித உரிமைகள் தொடர்பான உறுதிக்கூறல்கள் திட்டத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புசபை, கோரிக்கை விடுத்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த தாமதம் காரணமாக உண்மை மற்றும் காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மன்னிப்புசபை சுட்டிக்காட்டியுள்ளது. காணாமல் போனோர் தொடர்பான பணியக இயக்கம், உண்மையை கண்டறிதல் ஆணைக்குழு மற்றும் நீதிப்பொறிமுறை தொடர்பான சிறப்பு சபை என்பவை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்னிலையில், இலங்கை அரசாங்கம் உறுதிகூறல்களை மேற்கொண்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சுயாதீனமாக காட்டிய முனைப்புகள் வரவேற்கத்தக்கவை. எனினும் மீளெழாத உறுதிப்பாட்டுடன் குறித்த கடமைகளை மேற்கொள்ளும் திட்டவரைவை அறிவிக்கவேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திடம் மன்னிப்புசபை கோரியுள்ளது.