வவுனியா, மருக்காரம்பளை, கணேசபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தரொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

24 வயதுடைய சிவகுமார் கஜந்தன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு மரணமடைந்தவராவார். சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, நேற்றிரவு 8.30 மணியளவில் தனது வீட்டில் திடீரென தன் தந்தையை அழைத்து தான் விஷம் அருந்தியுள்ளதாக கூறியதையடுத்து உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்தது சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.