ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை பணிகளுக்கு இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று இராணுவத்தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி மாலியில் நிலைகொண்டுள்ள ஐக்கிய நாடுகளின், அமைதிப்படையில் இலங்கை படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் உலகின் ஏனைய நாடுகளுக்கு இணையாக இலங்கையின் படையினரை காட்டமுடியும் என்றும் இரர்ணுவ தளபதி தெரிவித்துள்ளார். 1960ஆம் ஆண்டில் இருந்தே இலங்கையின் படையினர் ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையில் அங்கம் பெற்றிருந்தனர். இந்நிலையில் இன்று இலங்கையின் 17ஆயி;ரம் படைவீரர்களும் 300 அதிகாரிகளும் அமைதிப்படை பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் மகேஸ் சேனாநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.