தெற்கு பிலிப்பைன்ஸில் வீசும் ´டெம்பின்´ என்னும் வெப்பமண்டல புயலால் குறைந்த பட்சம் 74 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் பிலிப்பைன்ஸின் மிதனாவோ தீவை தாக்கியதுடன் அங்கு வெள்ளத்தையும், நிலச்சரிவையும் ஏற்படுத்தியுள்ளது. டூபோட் மற்றும் பியகபோ ஆகிய இரு நகரங்களும் மோசமாக பாதிக்கப்பட்டதுடன் பல வீடுகள் பாறைகளால் புதையுண்டன. மணிக்கு 80 கிலோமீட்டர் வரையிலான வேகத்துடன் வீசிய காற்று, இப்போது மிதனாவோவை கடந்து மேலும் மேற்கு நோக்கி நகரும் முன்பு பலாவான் என்ற பகுதியின் தெற்கு முனையில் மையம் கொண்டுள்ளது Read more