இன்று அதிகாலை நாட்டை உலுக்கிய கோர விபத்து -“,இரத்தினபுரி பத்துல்பஹன பகுதியில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன், 44 பேர் காயமடைந்துள்ளனர். பத்துல்பஹன பகுதியில் இன்று அதிகாலை 2.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். ஊருபொக்கவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த குறித்த பேருந்து வீதியை விட்டு விலகிச் சென்று 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து தொடங்கொட வாவியில் விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பலியாகியுள்ளனர். காயமடைந்தவர்களுள் 41 பேர் இரத்தினபுரி மருத்துவமனையிலும், மூன்று பேர் கஹவத்தை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிறு குழந்தையொன்றும் உள்ளதாகவும், விபத்து இடம்பெற்றபோது பேருந்தில் 60 பயணிகள் பயணித்துள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.