ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் அறிவிப்புக்கு எதிராக, இலங்கை உள்ளிட்ட 128 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன.
டிரம்ப்பின் அறிவிப்புக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் யோசனை கொண்டுவரப்பட்டது. அந்த யோசனைக்கு, 128 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 9 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் ஜெருசலேம் தொடர்பான அமெரிக்காவின் தீர்மானத்துக்கு எதிரான யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தது ஏன் என்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. வெளிவிவகார அமைச்சினால் நேற்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், இந்த விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் ரூnடிளி;பத்தாவது விசேட அமர்வில், ‘ஜெருசலேமின் நிலைப்பாடு’ எனும் தலைப்பிடப்பட்ட பிரேரணைக்கு சார்பாக இலங்கை வாக்களித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடையிலான ஜெருசலேம் தொடர்பான பிரச்சினைகளை இருநாடுகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் மூலமாக தீர்த்துக்கொள்ள வேண்டும் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இரு நாடுகளுக்கான பொதுவான தலைநகரமாக ஜெருசலேம் பகிரப்பட வேண்டும் என்ற சர்வதேச புரிதலுக்கிணையான இலங்கையின் கொள்கை நிலைப்பாட்டுடன் இந்த பிரேரணைக்கு சார்பாக வாக்களிக்கப்பட்டதாக அமைச்சு விளக்கமளித்துள்ளது. இந்தத் பிரேரணைக்கு சார்பான இலங்கையின் வாக்களிப்பானது, ஐக்கிய நாடுகளின் எந்தவொரு அங்கத்துவ நாட்டுக்கும் எதிரான வாக்கு அல்ல என இலங்கை குறிப்பிட்டுள்ளது. அனைத்து விடயங்களையும் பேச்சுவார்த்தைகள் மூலமாக நிரந்தரமாக தீர்த்துக்கொள்வதால் இரு தரப்பினரினதும் நிலையான சமாதானத்தினை எய்திக்கொள்ள முடியும்.
ஆதலால், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அர்த்தமுள்ள பேச்சுவாரத்தைகள் மூலமாக தீர்வுகளுக்கு இட்டுச்செல்வதற்கான நிலைமைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்பின் தீர்மானத்துக்கு எதிரான மனு அடுத்த மாதம் கையளிப்பு – ர்சை”,ஜெருசலேமை, இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீர்மானத்துக்கு எதிரான மனு ஒன்றில் கொழும்பில் நேற்று கையெழுத்திடப்பட்டது.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த எதிர்ப்பு மனுவில் கையெழுத்திட்டதாக ஆங்கில ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது. டொனால்ட் ட்ரம்பின் தீர்மானத்துக்கு எதிரான இந்த மனு, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அடுத்த மாதம் கையளிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.