இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டம் துபி பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.

துபி பகுதியில் உள்ள பனாஸ் ஆற்று பாலத்தில் பயணித்த பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இதுகுறித்து காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்து உள்ளது. ஆற்றில் இருந்து 26 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகள், 3 பெண்கள் ஆவர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 15க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.