உள்ளுராட்சிமன்ற தேர்தல் குறித்து தேர்தல் ஆணைய காரியாலயத்திற்கு இதுவரை 52 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் தொடர்பில் இதுவரை 16 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கடந்த 9 ஆம் திகதி முதல் இதுவரை, தேர்தல் குறித்த 10 முறைப்பாடுகளும், தேர்தல் சட்டங்களை மீறிய 6 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.