முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் நிலமீட்பு போராட்டம் இன்று 299வது நாளாகவும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமது போராட்டத்துக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தருமாறு அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி, கடந்த மாசி மாதம் முதலாம் திகதி முதல் மக்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர்.