அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் நலின் டி சொய்சாவிடம் காவல்துறையினர் நேற்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை மருத்துவ சபையின் அதிகாரிகளின் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான ஒரு தொகை விண்ணப்பங்கள், பலவந்தமாக பரீசிலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பிலேயே விசாரணை இடம்பெற்றுள்ளது. முன்னதாக இந்த சம்பவம் குறித்து மருத்துவ சங்கத்தின் பதிவாளர் மருத்துவர் டெரன்ஸ் டி சில்வாவிடமும் பாதுகாப்பு அதிகாரிகளிடமும் மருதானை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்தநிலையில் நேற்றைய தினம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் நலின் டி சொய்சாவிடம் காவல்துறையினர் மூன்று மணி நேரம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.