முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் உரிமைகோரப்படாத உந்துருளிகள் பல நேற்று ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற போதை பொருள் விநியோகம், சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் விபத்துக்களின்போது கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தின் பொருப்பில் இருந்த ஒரு தொகுதி உந்துருளிகளே இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நீதிமன்ற வளாகத்தில் வைத்து மாவட்ட நீதிபதி தலைமையில் ஏல விற்பனை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தினால் கடந்த காலங்களில் சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் விபத்துக்களில் உரிமையாளர்கள் இறந்த நிலையிலும், வழக்குள் முடிவடைந்த நிலையில், இதுவரை உரிமைகள் கோரப்பாடாத 28 உந்துருளிகள் இவ்வாறு ஏல விற்பனை செய்யப்பட்டுள்ளன.