அடுத்த வருடம் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்து பிரசாங்களும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது. 7ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் பிரசார நடவடிக்கைகளுக்கு தடைவிதித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களுள் 10 வீதமானோருக்கு தேசிய அடையாள அட்டை இல்லையென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த வேட்பாளர்கள் அடையாள அட்டைக்குப் பதிலாக கடவுச்சீட்டு மற்றும் ஏனைய உறுதிப்படுத்தல் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.