வவுனியாவில் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வேட்பாளர்களை புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் வவுனியாவில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் அழைத்து கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தார்.இன்றுமுற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது தேர்தல் சம்பந்தமான விளங்கங்கள் வழங்கப்பட்டதோடு, தேர்தல் பிரச்சாரங்களை எவ்வாறு முன்னெடுப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் கட்சியின் பொதுச் செயலாளர் திரு சதானந்தம் (ஆனந்தி) உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர் .