கோவில்குளம் வ /இந்துக் கல்லூரியின் புதிதாக அமைக்கப்பட உள்ள கோயிலிற்க்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 01.01.2018 இன்று பாடசாலையின் அதிபர் திரு பூலோகசிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .இக்கோயிலுக்கான நிதியானது வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ .ஜி ரி .லிங்கநாதன் அவர்களின் பிராமண அடிப்படையிலான நிதியில் இருந்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும் .இந்நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் ஜி .ரி .லிங்கநாதன் பாடசாலையின் அதிபர் திரு .பூலோகசிங்கம் ,முன்னாள் அதிபர்களான திருமதி .நடராஜா மற்றும் வையாபுரிநாதன் ,சிவன் கோவில் தலைவர் நவரட்ணம் ,கோவில்குளம் கண்ணன் கோவில் தலைவர் சுந்தரம் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.