தோழர் சுந்தரத்தின் 36வது வருட நினைவுதினம்- புளொட் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகர்களுள் ஒருவரும், தளபதியும், புதியபாதை ஆசிரியருமான தோழர். ச. சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) யாழ் சுழிபுரத்தை பிறப்பிடமாய் கொண்ட அவர்; வீரமகனாய் மரணித்து 36வது (02.01.2017) ஆண்டு நினைவு நாள் இன்றாகும். புதிய பாதை அமைத்த தோழனை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றோம். சிறந்த தலைமைப் பண்பும், துணிச்சலும், போராட்டத் தெளிவும் மிக்க பொதுவுடைமைவாதியான தோழர் சுந்தரம் அவர்கள் 02.01.1982 ல் யாழ் சித்திரா அச்சகத்தில் வைத்து புலிகளின் தவைர் பிரபாகரனால் ஒளிந்திருந்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்;.

புதியபாதை வகுத்தவன் தான் சுந்தரம்
மக்கள் புரட்சி வெல்ல உழைத்தவன் தான் சுந்தரம்

புதியபாதை வகுத்தவன் தான் சுந்தரம்
மக்கள் புரட்சி வெல்ல உழைத்தவன் தான் சுந்தரம்

தலைவர்களின் பொய்யுரையை எதிர்த்தவன்
தன் மானத்தோடு விடுதலைக்கு உழைத்தவன்
தலைவர்களின் பொய்யுரையை எதிர்த்தவன்
தன் மானத்தோடு விடுதலைக்கு உழைத்தவன்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தில்
ஒரு தளபதியாய் இறுதிவரை உழைத்தவன்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தில்
ஒரு தளபதியாய் இறுதிவரை உழைத்தவன்…..புதியபாதை

மலையத்து ஏதிலிக்கும் உதவினான் – காணி
மனைகள் தந்து குடியமர்த்தி பேணினான்
மனக்கவரும் பாட்டாளிக் கொள்கையில் – தமிழ்
மக்களினம் நடைபோடத் தூண்டினான்……. புதியபாதை

சுழிபுரத்து மண்தனிலே தோன்றினான் பகைவர்
சூட்சி வெல்லும் வீரனாக விளங்கினான்
ஆனைக்கோட்டை காவல் நிலையம் தாக்கியே பகைவர்
ஆயுதத்தை கைப்பற்றிக் காட்டினான்……… புதியபாதை

தவறுகின்ற தலைமையினை சாடினான் – அவன்
தவறாது விடுதலையை நாடினான்
துரோகிகளால் சூடுபட்டு மறையினும் – எம்
தோழர்களின் உள்ளங்களில் வாழ்கிறான்………. புதியபாதை