தபால் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடியில், எதிர்வரும் 10ம் திகதி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள, ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தீர்மானித்துள்ளது.
தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு பல சந்தர்ப்பங்களில் தெரியப்படுத்தியுள்ளதாக, அந்த முன்னணியின் இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தக்க பண்டார கூறியுள்ளார்.இந்நிலையில், தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாமையால் எதிர்வரும் 10ம் திகதி நள்ளிரவு முதல் தொடர் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக சிந்தக்க பண்டார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.