உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் Taro Kono இன்று இலங்கைக்கு வரவுள்ளார். மேலும் இந்த விஜயத்தின் போது அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.
இதேவேளை, சுமார் 15 வருடங்களின் பின்னர் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வரவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.