உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக விண்ணப்பித்த தபால் மூல வாக்காளர்களில், சுமார் 560,000 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தபால்மூல வாக்காளர்களின் பெயர் பட்டியல் எதிர்வரும் 8ஆம் திகதி பூர்த்தி செய்யப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்னபிரிய குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.