மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை இரத்துச் செய்து அரசாங்கத்தின் கீழ் இலாபமற்ற 2 நிறுவனங்களாக நடாத்திச் செல்லும் உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதன்படி சைட்டம் நிறுவனத்தை கலைக்கும் நடவடிக்கைகளை பூரணப்படுத்துவதற்காக, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. சைட்டம் மற்றும் சிறீலங்கா தகவல் தொழிநுட்ப நிறுவனங்களுக்கு(SLIIT) இடையில் இவ்வாறு கைச்சாத்து இடம்பெற்றுள்ளது. கடந்த 30ம் திகதி இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக அரச தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய சைட்டம் நிறுவனம் இரத்தாவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதி கிடைக்க பெற்றவுடனே அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் சட்டபூர்வமானதாகும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.