ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் தாரோ கொனோ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

நேற்று இரவு 9.15 மணியளவில் ஜப்பான் நாட்டுக்கு சொந்தமான சிறப்பு விமானம் மூலம் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கட்டுநாயக்க வந்தடைந்துள்ளார். அவருடன் 24 பேர் அடங்கிய தூதுக்குழுவினரும் வருகை தந்துள்ளனர். இவர்கள் பல்வேறு முக்கிய சந்திப்புக்களை மேற்கொள்ளவிருப்பதாக தெரியவருகின்றது.