புலிகள் இயக்கத்துக்காக சுவிட்சார்லாந்தில் நிதி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 13 பேர், அந்த நாட்டின் பிராந்திய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

எதிர்வரும் திங்கட்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அவர்கள் சுமார் 15.3 மில்லியன் டொலர்களை புலிகள் இயக்கத்துக்காக வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் இலங்கை, ஜேர்மன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களில் சிலர் முன்னால் உலக தமிழர் ஒழுங்கிணைப்பு குழுவின் உறுப்பினர்களாகவும் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது. 1999ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையில் அவர்கள் பல்வேறு வழிகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நிதித்திரட்டலில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் மீது, ஏமாற்று, போலி ஆவணத்தயாரிப்பு, பணச்சலவை மற்றும் பணம் பறித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.