உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் தேர்தல் காரியாலயங்கள் அனைத்தும் இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னர் அகற்றப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
குறித்த உத்தரவை மீறி நடத்திச் செல்லப்படுகின்ற காரியாலயங்கள் மற்றும் சுவரொட்டிகள் அனைத்தையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கூறினார். தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அதேவேளை எதிர்வரும் 20ம் திகதிக்கு முன்னர் அனைத்து வேட்பாளர்களும் தமது வருமானங்களையும் சொத்துக்களையும் சமர்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன் வணக்கஸ்தலங்களில் வேட்பாளர்கள் சார்பாக மத நிகழ்வுகள் இடம்பெற்றால் அல்லது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டால் வேட்பாளர்களுக்கு எதிராக மாத்திரமன்று மத ஸ்தலத்தின் குருக்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.