இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் கலாநிதி. ஷாஹித் அஹ்மத் ஷஸ்மத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைய நாட்டில் நிலவிய உர தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்வதன் நிமித்தம், உரிய நேரத்தில் உரத்தினை இலங்கைக்கு அளித்த பாகிஸ்தானிய பிரதமர் ஷஹித் கஹகான் அப்பாசி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு ஜனாதிபதி தனது நன்றியினை தெரிவித்தார். இச்சந்திப்பின் பொழுது, பாகிஸ்தானால் மேற்கொள்ளப்படுகின்ற 200 மில்லியன் டெல்லர் நிதியுதவியுடனான பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தார். இதன்போது பொலன்னறுவை மாவட்டத்தில் பால் பண்ணை ஒன்றினை அமைப்பதற்கான சாத்தியக்கூறினை ஆராய்வதற்காக பாகிஸ்தானிய உயர்மட்ட நிபுணர் குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளதாக ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.