எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கட்சித் தலைவர்களுடனான விஷேட சந்திப்பொன்றுக்கு, சபாநாயகர் கரு ஜெயசூரிய அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த அறிக்கை தொடர்பிலான விவாதத்திற்காக, விரைவாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு, கட்சித் தலைவர்கள் சபாநாயகரிடம் கோரியுள்ளனர். இதற்கமைய, பாராளுமன்றத்தை கூட்டும் தினம் பற்றி கலந்துரையாடவே, கரு ஜெயசூரிய கட்சித் தலைவர்களுடனான சந்திப்பொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், இது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எழுத்துமூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.