கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் தீக்கிரையாகி பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் வசித்துவந்த தம்பதியினருக்கிடையில் தினமும் குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கமாக காணப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் வாய்த்தர்க்கம் அதிகமானதை தொடர்ந்து கணவர் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரியூட்ட முயற்சித்ததாகவும், எரியூட்டப்பட்ட குறித்த பெண் தாம் மாத்திரம் உயிரழக்க வேண்டிய தேவை இல்லை என்பதோடு கணவரும் குற்றவாளியே என கூறியபடி கணவரை கட்டியணைத்துள்ளார். இதன்போது கணவரும் எரிகாயங்களுக்குள்ளான நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர்களின் மகளான சிறுமி ஒருவரும் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கணவர் காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதுடன், மனைவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபின் மரணித்துள்ளார்.