வடமாகாண முதலமைச்சர் நிதியம் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் மாற்றம் போன்ற விடயங்கள் தொடர்பில் இந்த வருடத்திலாவது வடமாகாண ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார். புதுவருடத்திற்கும் புதிய அரசாங்கங்களுக்குமிடையில் ஒற்றுமைகள் உள்ளதாக தெரிவித்த அவர், சகல புதிய அரசாங்கங்களும் ஆரம்ப காலத்தில் சிறப்பாக இயங்கும். ஆனால் பின்னர் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதால் மக்களிடமிருந்துவரும் விமர்சனங்களினால் ஆரம்ப காலத்தில் இயங்கியதுபோல் இயங்கமுடியாத நிலை ஏற்படும். வடமாகாணசபை 5வது வருடத்திற்குள் நுழைந்திருக்கின்றது.
இன்னும் சில மாதங்களே தாம் ஆட்சியில் இருப்பதாக தெரிவித்த அவர், கடந்தகாலத்தில் தமக்கு தரப்படாமல் இருந்தவற்றை இந்த வருடத்திலாவது தருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.