கிளிநொச்சி – பளைப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அவர் தற்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பளை காவல்துறை நிலையத்திற்கு அருகாமையில் நேற்றிரவு இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பளை நகரப் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 38வயதான குடும்பஸ்தரே காயமடைந்துள்ளார். இவர் தமது பணியை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, நாட்டு துப்பாக்கி கொண்டு இந்த சூட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் இதுவரையில் யாரும் கைது செய்யப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றார்கள்.