சுவிட்ஸர்லாந்து நீதிமன்றத்திற்கு வெளியே சுமார் 150க்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டினார்கள் என்ற குற்றச்சாட்டில் 13 பேருக்கு எதிராக சுவிட்ஸர்லாந்து நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றையதினம் 13பேரும் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது. 1999ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவர்கள் பல்வேறு வழிகளில் சுவிஸ்சர்லாந்தில் புலிகளுக்காக நிதிசேகரிப்பில் ஈடுப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் 15.3 மில்லியன் டொலர்களை சேகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டுக்குள், அல் கைடா உள்ளிட்ட சில அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளாக பெயரிடப்பட்டுள்ள போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அந்த பட்டியலில் இணைக்கப்படவில்லை என்று அவர்கள் தரப்பில் வாதிடப்படுகின்றது.