வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் மனைவியை கொலை செய்து கணவன் கழுத்தில் சுறுக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த சடலங்கள் இன்று அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவருக்கும் இடையில் நேற்றிரவு இடம்பெற்ற தகராறே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் 51 வயதுடைய செல்வம் புஷ்ப்பராணி என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பியசேன எதிரிசிங்ஹ என்பவரே கழுத்தில் சுறுக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.குறித்த பெண் முதலாவது திருமணம் செய்து கணவனை பிரிந்து எதிரிசிங்க என்பவரை மறுமணம் செய்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். அத்துடன், எதிரிசிங்க என்பவர் புஷ்பராணியை பொல்லைக் கொண்டு தலையில் தாக்கியதாகவும் பின்னர் எதிரிசிங்க என்பவர் சுறுக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் எனவும் புஷ்ப்பராணியின் ஐந்து வயதுடைய பேத்தியான சிறுமி தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமியின் பெற்றோர் இல்லாத நிலையில் சிறுதி தனது அம்மம்மாவான புஷ்ப்பராணியிடமே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த சிறுமி இரு பிணங்களுடையே தனது இரவு பொழுதினை கடத்தியுள்ளார்.