வெள்ளை வேன் விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி தஸநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கடற்படையின் ஏனைய முன்னாள் உத்தியோகஸ்தர்கள் ஐவருக்கும் பிணை வழங்கபட்டுள்ளது. சந்தேகநபர்களால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் சந்தேகநபர்கள் செல்வதற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதற்கமைய தலா ஒரு இலட்சம் ரூபா ரொக்கப்பிணையும், மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான தலா மூன்று சரீர பிணைகளும் விதிக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து கடற்படையின் முன்னாள் பேச்சாளர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிட்டதக்கது.