சிறீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் தாதியர்கள் இன்று 7ஆவது நாளாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இவர்கள் கடந்த 2ஆம் திகதியிலிருந்து போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

தாதியர்களின் வரவினை கண்காணிக்க கைவிரல் அடையாளத்திற்குரிய இயந்திரம் பொருத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். தங்களது கோரிக்கைக்கு இதுவரை எவரும் இணக்கம் தெரிவிக்காமையினால் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தாதியர்கள் தெரிவித்துள்ளனர். சிறீ ஜயவர்தன புற வைத்தியசாலையின் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதனால் வைத்தியசாலையின் வழமையான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கமப்பட்டுள்ளது.