உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குச்சீட்டு விநியோகம் பிற்போடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகைமை பெற்றுள்ள வாக்காளர்களுக்கு தபால் வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய பொதிகளை விநியோகிக்கும் நடவடிக்கை நாளைய தினம் முன்னெடுக்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இதற்கமைய, வட மாகாணத்திலும் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் தபால் வாக்குச்சீட்டு விநியோகம் எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளுக்கான தபால் வாக்குச்சீட்டுக்கள் 13 ஆம் திகதி விநியோகிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.