மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி வாவிக்கரையோரம், சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலம், இன்று காலை கரையொதுங்கியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்கள், பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம், குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். சடலம், இதுவரை அடையாளம் காணப்படவில்லையெனவும் இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.