மாங்குளம் – பழைய முருகண்டிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வாகன சாரதி உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கோளாறு ஏற்பட்ட நிலையில், பழைய முருகண்டிப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பார ஊர்தியில், அதே திசையில் கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கயஸ் வாகனம் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விபத்து தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மாங்குளம் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.