மாலியில் சகஜ நிலையை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஐ.நா.வின் பாதுகாப்புப் படையில் இணைந்துகொள்ளும் முகமாக, இலங்கை இராணுவ வீராங்கனைகள் 18 பேர் நேற்று மாலி நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இதே பணியில் ஈடுபடும் முகமாக, கடந்த 24ஆம் திகதி இராணுவவீரர்கள் 150பேர் அடங்கிய குழுவொன்று அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மாலியில் உள்ள ஐ.நா. படையில் இணைந்து பணியாற்ற மொத்தம் 200 வீர, வீராங்கனைகளை அனுப்பிவைக்க இலங்கை முடிவுசெய்துள்ளது. இவர்கள், ஒரு வருட காலம் மாலியில் இருந்து பணியாற்றவுள்ளனர். அதன்படி, இதுவரை மொத்தமாக 168 பேர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் விரைவில் மாலி நோக்கிப் புறப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.