இலங்கையுடன் சிறந்த ராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகள் இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் வர்த்தகத்துறை அமைச்சர் மொஹமட் பெர்வேஸ் மாலிக் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் உயரிய வர்த்தக தொடர்புகளைக் கொண்ட நாடுகளுள், இலங்கை குறித்து அதிக அவதானம் செலுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற பாகிஸ்தானின் கண்காட்சி ஒன்றின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.