யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த ஏனைய கலைப்பீட 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு மறு அறிவித்தல் வரும் வரை வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு இடையே நேற்று மோதல் இடம்பெற்றது. இதில் மூன்று மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதனை அடுத்து 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் உட்பிரவேசிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் முதலாம் இரண்டாம் வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.