இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏதிலி அந்தஸ்த்து கோருவோரைக் கட்டுப்படுத்த அடுத்தவாரம் ஜப்பான் புதிய நடைமுறையை அமுலாக்கவுள்ளது.

3 முறை ஜப்பானில் ஒருவர் சட்ட ரீதியாக ஏதிலி விண்ணப்பத்தை மேற்கொள்ள முடியும்.

அதன் பின்னரே அவரை நாடுகடத்தவோ, ஏதிலிகள் முகாமிற்கு மாற்றவே அந்த நாட்டின் குடிவரவுத்திணைக்களத்துக்கு அதிகாரம் வழங்கப்படும். ஆனால் புதிய நடைமுறையின்படி, முதல் விண்ணப்பத்தின்போதே குறித்த ஏதிலி விண்ணப்பதாரியை நாடுகடத்த அல்லது ஏதிலி முகாமிற்கு மாற்ற தீர்மானிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் நீதி அமைச்சர் யோகோ காமிகாவா இதனைத் தெரிவித்துள்ளார். உண்மையான ஏதிலிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.