கொழும்பு நகரத்தில் பயணிகள் போக்குவரத்துக்காக மின்சார பஸ் வண்டிகள் 18இனை சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மின்சார பஸ்களில் தரத்தில் உள்ளடங்கி இருக்க வேண்டிய விடயங்கள் சம்பந்தமான அறிக்கை ஒன்று போக்குவரத்து சபையால் போக்குவரத்து அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கேள்விப்பத்திரம் கோரப்பட்டு இந்த பஸ்கள் கொள்வனவு செய்யப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன கூறியுள்ளார். இலங்கை போக்குவரத்து சபைக்கு 50 மின்சார பஸ்களை கொள்வனவு செய்வதற்காக அமைச்சரவையினால் 500 மில்லியன் ரூபா நிதி திறைசேரியினால் பெறப்பட்டுள்ளது.

இந்த நிதியில் இருந்து முதல் கட்டமாக 18 மின்சார பஸ் வண்டிகள் கொள்வனவு செய்யப்பட உள்ளதுடன், அவை இந்த ஆண்டிற்குள் கொழும்பு நகரத்தில் பயணிகள் போக்குவரத்துக்காக இணைத்துக் கொள்ளப்பட உள்ளதுடன், ஏனைய பஸ்களை நெரிசல் மிக்க பகுதிகளில் சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.